Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜூலை 13 , பி.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்
கல்முனை வலயப் பாடசாலைகளுகிடையிலான மெய்வல்லுநர் போட்டியானது கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் கல்முனை வலயத்திலுள்ள ஐந்து கோட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 பாடசாலைகள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை மாணவ, மாணவிகள் 5 முதலாமிடங்களையும், 9 இரண்டாமிடங்களையும், 4 மூன்றாமிடங்களையும் பெற்று மாகாண மெய்வல்லுநர் போட்டியில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இவ்வெற்றியானது அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை வரலாற்றில் அதிகூடிய போட்டி நிகழ்ச்சிகளில் மாகாண மட்டப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்குபற்றுவது இதுவே முதல் முறையாகும்.
இவ் வீர, வீராங்கனைகளுக்கு பயிற்றுவித்த எம்.ஏ.எம். றியால், யூ.எல்.எம். சிபான், ஏ.டப்ளியு.எம். ஆசாத்கான் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். பைசால் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர், கல்விசாரா ஊழியர், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர், பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
49 minute ago