2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

கல்முனை அல் பஹ்ரியா பிரகாசிப்பு

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியில் விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயம் பிரகாசித்தது.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வித்தியாலயத்தின் யூ.எல். அஸ்ஜத் போட்டித் தூரத்தை 57.6 செக்கன்களில் கடந்து புதிய சாதனையை ஏற்படுத்தி முதலிடத்தைப் பெற்றதுடன், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.எம். றிஹான் 300 மீற்றர் தடைதாண்டலில் 42.9 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து புதிய மாகாண சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றதுடன்,16 வயது பிரிவில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பஹ்ரியா முதலிடத்தைப் பெற்றது.  

20 வயதுகுட்பட்ட ஆண்கள் பிரிவில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இரண்டாமிடத்தை வித்தியாலயம் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .