2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

கந்தகட்டி தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டிகள்

Editorial   / 2025 மார்ச் 13 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் ‪

மத்திய மாகாண வத்தேகம கல்வி வலய பன்விலை கோட்டத்திற்குட்பட்ட மமா/க/வத்/கந்தகட்டி தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டிகள் 12.03.2025 அன்று பாடசாலை அதிபர் சுமன் இராஜேந்திரன் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பன்விலை பிரதேச செயலாளர் திருமதி நிலுசா மனோரத்ன, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வள்ளுவர், பாரதி மற்றுமு் இளங்கோ ஆகிய பெயர்களைத் தாங்கிய இல்லங்களுக்கிடையில் போட்டிகள் நடைபெற்றன.

இவ்விளையாட்டுப் போட்டியில் 1,365 புள்ளிகளைப் பெற்று இளங்கோ இல்லம் முதலாம் இடத்தை சுவீகரித்துக் கொண்டது.

பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள் S.தியாகநாதன் ,T.சந்திரகுமார் மற்றும் பெற்றோர் பழைய மாணவர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகால  இடைவெளியின் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விளையாட்டுப் போட்டி பிரதேச மக்களது கவனத்தை ஈர்த்ததுடன் முறையான ஒழுங்கமைப்புக்கள் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X