Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதன்முறையாக எட்டு மணித்தியால கார்ட்டிங் சவால் போட்டியை அடுத்த மாதம் 13ஆம் திகதி நடத்த பண்டாரகமவிலுள்ள இலங்கை கார்ட்டிங் சுற்றுவட்டம் தயாராகியுள்ளது.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் சர்வதேச ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள ஓடுபாதையில் எட்டு மணித்தியாலங்கள் இடையறாத சவாலில் கலந்துகொள்ளவிருப்பது நிச்சயம் சிறந்ததொரு பந்தயமாகவே அமையும்.
கட்டாயமான நிறுத்தம் மற்றும் மாற்றங்களை இது கொண்டிருக்கும். கிண்ணம் மற்றும் பதக்கங்கள் முதலாம் மற்றும் இரண்டாவது வெற்றியாளர்களுக்கே வழங்கப்படும். அன்றைய நாளின் வேகமான பந்தயவீரருக்கும் இது வழங்கப்படும். தேசிய கார்ட்டிங் பந்தயவீரர்களை உள்ளடக்கிய அணிகளுக்கு இந்த எட்டு மணித்தியால இடையறாத கார்ட்டிங் போட்டியில் பங்குபற்ற முடியும். ஒவ்வொரு அணியும் தலா ஆகக் குறைந்தது 3 பந்தைய வீரர்களையும், ஆகக் கூடியது 6 பந்தைய வீரர்களையும் கொண்டதாக இருக்கவேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 0770 555 577 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும். ஆய்வுகளின் பின்னர் முதல் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே நுழைவு வழங்கப்படும்.
இலங்கை கார்ட்டிங் சுற்றுவட்டம் கடந்தாண்டு மீள அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது முதல் ஆரம்பம் முதல் முடிவுவரை சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றி கார்ட்டிங் போட்டிகள் முழு அளவில் நடத்தப்பட்டுவருகின்றன. துறைசார் நிபுணத்துவத்தை மனதில் நிறுத்தி, சான்றளிக்கப்பட்ட குழுவினால் போட்டி கண்காணிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago