Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டியானது, மன்னாரில் கடந்த வாரயிறுதியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் முருங்கன் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் இப்போட்டி இடம்பெற்றது.இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குபற்றின.
குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டியானது, ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து பிரிவுகளில் நடைபெற்றது.
இதன்போது ஏ பிரிவில் முதலாமிடத்தை உயிலங்குளத்தை சேர்ந்த பிரின்சியன், இரண்டாமிடத்தை காத்தான் குளத்தைச் சேர்ந்த தங்கராசா, மூன்றாமிடத்தை வாழ்க்கை பெற்றான் கண்டலை சேர்ந்த சிந்தாத்துரை ஆகியோரது காளைகள் பெற்றன.
பி பிரிவில் முதலாமிடத்தை நொச்சிக்குளத்தைச் சேர்ந்த செல்வக்குமார், இரண்டாமிடத்தை உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரின்சியன், மூன்றாமிடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா ஆகியோரது காளைகள் பெற்றன.
சி பிரிவில் முதலாமிடத்தை பூவரசன் குளத்தைச் சேர்ந்த நியாஸ், இரண்டாமிடத்தை பிடாரி குளத்தைச் சேர்ந்த நியூரன், மூன்றாமிடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த விஜயன் ஆகியோரின் காளைகள் பெற்றன.
டி பிரிவில் முதலாமிடத்தை சிறுகண்டலைச் சேர்ந்த கென்றிகா, இரண்டாமிடத்தை மணற் குளத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை, மூன்றாமிடத்தை உயிர்த்தராசன் குளத்தை சேர்ந்த அஜந்தன் ஆகியோரின் காளைகள் பெற்றன.
ஈ பிரிவில் முதலாமிடத்தை நானாட்டானை சேர்ந்த குகன், இரண்டாமிடத்தை பிச்சை குளத்தைச் சேர்ந்த ரூபராஜ், மூன்றாமிடத்தை வட்டக்கண்டலைச் சேர்ந்த அஜித்குமார் ஆகியோரது காளைகள் பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago