Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் அறுகம்பை அபிவிருத்து ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொத்துவில் அறுகம்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறுகம்பை சர்வதேச அரைமரதனோட்டப் போட்டியில் பெண்களில் பிரான்ஸின் எமலி ஒலிவவும், ஆண்களில் வத்தேகமவைச் சேர்ந்த நிஸான் மதுரங்கவும் வென்றன.
பொத்துவில் அறுகம்பை அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன் மருத்துவருமான இஸட்.எம். ஹாஜித் தலைமையில் சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமாகி பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக, பசறைச் சேனையை அடைந்து பின்னர் ஹிஜ்ரா வீதியினூடாக சென்று அங்கிருந்து மீண்டும் பொத்துவில் பாணம பிரதான வீதியினூடாக, ஊரணி வளைவை அடைந்து இறுதியாக அறுகம்பே விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்ற இந்த 21.1 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரைமரதனோட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற நிஸான் மதுரங்க 15,000 ரூபாயைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஆண்களில் இரண்டாமிடத்தைப் பெற்ற நுவரெலியாவின் அருன பண்டார 10,000 ரூபாயையும், மூன்றாமிடத்தைப் பெற்ற தெகிஹோவிட்டவைச் சேர்ந்த கலும் தர்மேந்திரா 5,000 ரூபாயையும் பெற்றிருந்தனர்.
இதேவேளை, 21.1 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பெண்கள் பிரிவில் முதலாமிடம் பெற்ற எமலி ஒலிவ 15,000 ரூபாயையும், இரண்டாமிடத்தைப் பெற்ற பின்லாந்தின் அஞ்சலினா பென்ரின்பிரோ 10,000 ரூபாயையும், மூன்றாமிடத்தைப் பெற்ற பிரான்ஸின் பிரன்ஸிஸ்சா புனஸ்ஸியோ 5,000 ரூபாயையும் பெற்றிருந்தனர்.
இம்மரதனோட்டத்தில், இலங்கை இராணுவத்தின் 242ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.ரீ.ஜி. ரணசிங்க, கேணல் ஜானக்க விஜயரட்ன, அறுகம்பை அதிரடிப் படை முகாமின் பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் சில்வா, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித், கேணல் கே. மதகெதர, அறுகம்பே சுற்றுலா மையத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டு பணப்பரிசில்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தனர்.
இந்த அரை மரதனோட்டப் போட்டியில் கிடைக்கப் பெற்ற நிதி அறுகம்பை பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கு வழங்கப்பட்டுள்ளதோடு அவை எமக்கும் பெரும் வெற்றியைத் தந்துள்ளதாக இஸட்.எம். ஹாஜித் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago