2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரையிறுதியில் நியூ ஸ்டார்ஸ்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

ஜயா பார்ம் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் புத்தளம் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் 12 அணிகள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நியூ ஸ்டார்ஸ் தகுதி பெற்றது.

அண்மையில் நடைபெற்ற லிவர்பூலுடனான போட்டியில் வென்றே அரையிறுதிக்கு நியூ ஸ்டார்ஸ் தகுதி பெற்றிருந்தது. இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் நியூ ஸ்டார்ஸ் வென்றிருந்தது.

அதனடிப்படையில், முதலாவது அரையிறுதிப் போட்டியில் எருக்கலம்பிட்டியும், விம்பிள்டனும் மோதவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூ ஸ்டார்ஸும், யாழ். முஸ்லிம் யுனைடெட்டும் மோதவுள்ளன.

அரையிறுதிப் போட்டிகள் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி இம்மாதம் 26ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .