Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 29, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளானவை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றபோது மட்டக்களப்பு, அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகள் பிரகாசித்திருந்தனர்.
வித்தியாலயத்தின் றொபேக்கா 16 வயதுக்குட்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர், 110 மீற்றர் தடைதாண்டல் போட்டிகளிலும், நகுலேஸ்வரன் டாரிகா 18 வயதுக்குட்பட்ட குண்டு போடுதலுடன், தட்டெறிதல் போட்டியில் 27.54 மீற்றர் தூரம் எறிந்து புதிய கிழக்கு மாகாண சாதனையுடனும் தேசியமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் வித்தியாலயத்தின் கபடி அணியும் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான நிக்கோல் நிசாந்தன், திருமதி. பிரதீஸ்கரன் நிரஞ்சலா, உடற்கல்வி ஆசிரியர் செல்வி.க. லதா ஆகியோருக்கு பாடசாலை அதிபர் வல்லிபுரம் முருகதாஸ் உள்ளிட்ட கல்வி சமூகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Jan 2025