Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2022 நவம்பர் 30 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம், கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை, கிழக்கு மாகாண திறந்த பூப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தேசிய ரீதியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மேற்படி சம்பியன்ஷிப் போட்டியில் 13, 15, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாருக்குமான தனிநபர், இரட்டையர், கனிஷ்ட பிரிவுக்குட்பட்ட இருபாலாருக்குமான கலப்பு இரட்டையர், 30 வயதுக்கு மேற்பட்ட, 70 வயதுக்கு மேற்பட்ட இரு பாலாருக்குமான கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும், தேசிய மட்டத்தில் சம்பியன்களாகவும், இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ், கிண்ணம், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி நாளை மறுதினம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு தொடரின் பணிப்பாளர் அலியார் பைஸரை 0776078706 தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago