Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
SportUnleash பாடசாலை விளையாட்டு விருதுகள் 2022 நிகழ்வு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு 2022 ஆம் ஆண்டின் சிறந்த மூன்று விளையாட்டு வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்த மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளுக்கும், 15 விளையாட்டுக்களில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 15 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கும் மறக்கமுடியாத மாலைப் பொழுதாக அமைந்திருந்தது. SportUnleash அனுசரணையில் SPORTSINFO ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வானது, இலங்கையின் விளையாட்டுத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. SportUnleash இனால் 9 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் விளையாட்டுத் திறமைகளை இனங்கண்டு, அந்த விளையாட்டுக்களில் சிறுவர்களை ஊக்குவிப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.
இலங்கையின் முதலாவது வருடாந்த தேசிய பாடசாலைகள் விளையாட்டு விருதுகள் நிகழ்வாக அறிமுகமாகியிருந்த SPORTSINFO தவிசாளரான திலான் ரங்கனவின் சிந்தனை வெளிப்பாடாக அமைந்திருந்த இந்நிகழ்வுக்கு, முன்னாள் தேசிய சாதனையாளரும், SportUnleash இன் தவிசாளரும் Power World Gyms இன் ஸ்தாபகருமான தலவு அலைலாமா ஆதரவளித்திருந்தார்.
2022 ஆம் ஆண்டுக்காக பின்வரும் மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. மெய்வல்லுநர் – சுவட்டு (Track) நிகழ்வுகளில் கொழும்பு றோயல் கல்லூரியின் நதுன் கவீஷ பண்டார மற்றும் கள (Field) நிகழ்வுகளில் சப்புகஸ்கந்த யொஷிடா சர்வதேச பாடசாலையின் அஷ்மிக கேஷான் கோரல ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பூப்பந்தாட்டம் – புனித பீட்டர் கல்லூரியின் விரேன் நெத்தசிங்க. கூடைப்பந்தாட்டம் – பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரியின் ஜி.ஜி.மினோலி மரியா டிரேக்ஸி. குத்துச்சண்டை – நாலந்த கல்லூரியின் பசிந்து உமயங்க மிஹிரான். சதுரங்கம் – நாலந்த கல்லூரி எல்.எம். சுசல் ரி டி சில்வா. கிரிக்கட் – புனித சூசையப்பர் கல்லூரியின் துனித் வெல்லால்லகே. கராதே – சப்புகஸ்கந்த விசாகா வித்தியாலயத்தின் சி.ஏ. தாருகி சஷிந்தி, வலைப்பந்தாட்டம் – குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரியின் ஹிருனி ஹேஷானி, ரோவிங் – ஏசியன் இன்டர்நஷனல் பாடசாலையின் ஷேலோன் ஷயான் குணரட்ன, ரக்பி – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் தினுப செனெவிரட்ன, நீச்சல் – விசாகா வித்தியாலயத்தின் கங்கா செனெவிரட்ன, டெனிஸ் – புனித பிரிட்ஜட் கன்னியர் மடத்தின் தினரா டி சில்வா, கரப்பந்தாட்டம் – ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியின் கவிஷ்க மதுசங்க, மல்யுத்தம் – கிரிஉல்ல, வெல்பல்ல சங்கரத்தன மகா வித்தியாலத்தின் நெத்மி அஹின்ஸா பெர்னான்டோ, பயிற்றுவிப்பாளர் – ரி.எஸ்.சுரங்க குமார, சிறந்த பாடசாலை – நாலந்த கல்லூரி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
9 hours ago