Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜூன் 27 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை ஜொலி போயிஸ் விளையாட்டு கழகம் அதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய மாபெரும் கால்பந்தாட்ட சுற்று போட்டி மாத்தளை மாநகரத்தில் அமைந்துள்ள பேர்னாட் அலுவிகார விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.உப்பாலி தலைமையில் (26) நடைபெற்றது.
அணிக்கு ஏழு பேர் கொண்ட இந்த கால்பந்தாட்ட சுற்று போட்டியில் 18 கழகங்கள் பங்கு பற்றியதுடன் மொத்தமாக 43 போட்டிகள் நடைபெற்றன. ஆரம்ப சினேகபூர்வ போட்டியாக மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவர் அணிக்கும் றோயல் இன்டர்நேஷனல் பாடசாலை அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் (01:00) என்ற கோல் வித்தியாசத்தில் சாஹிரா கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வுடன் கால்பந்தாட்ட சுற்று போட்டிகள் ஆரம்பமாகின.
ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நவகல் பவுண்டேஷன் தலைவரும் அரச சட்ட அமுலாக்கல் திணைக்களத்தின் தலைவரும் விஜயா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான திரு. நிஷாந்த பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட சுற்று போட்டியில் இறுதிப்போட்டிக்கு இக்கொல்ல எப்.சி மற்றும் கோல்டன் மூன் ஏ ஆகிய இரு அணிகளும் தெரிவு செய்யப்பட்டன. இறுதிப் போட்டியில் (01:00 )என்ற கோல் வித்தியாசத்தில் கோல்ட் மூன் ஏ அணி, இக்கொல்ல எப்.சி அணியினரை வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தையும் 30.000 ரூபா காசோலையையும் தமதாக்கிக் கொண்டனர்.சம்பியன் அணிக்குரிய வீரர்களுக்கு பதக்கம், வெற்றிக் கிண்ணம், காசோலை என்பவற்றை அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபை உறுப்பினர் பி. மனோகரன் வழங்கி வைத்தார்.
இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இக்கொல்ல எப்.சி அணியினருக்கான பதக்கம் அதேபோன்று வெற்றிக் கிண்ணம், 15,000 ரூபா பெறுமதியான காசோலை என்பவற்றினை அதிதியாக கலந்து கொண்டு சலனி ரெஸ்டூரண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஜட்டிலயன் வழங்கி வைத்தார்.
சுற்றுப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட ஜொலி போய்ஸ் கோல்ட் அணிக்குரிய வெற்றிக் கிண்ணத்தை வர்ணமாலினி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இமாஸ் வழங்கி வைத்தார். இந்த சுற்று போட்டியின் சிறந்த பந்து தடுப்பாளருக்கான விருதை கோல்ட் மூன் ஏ கழகத்தின் பந்து தடுப்பாளர் சமீர் பெற்றுக் கொண்டதுடன் மிகச் சிறந்த வீரருக்கான விருதை கோல்ட் மூன் ஏ அணியினுடைய வீரர் ஆசீர் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் மாத்தளை மாநகர சபை ஆணையாளர் தனுக்க பம்பறதெனிய, மாத்தளை மாநகர சபை உறுப்பினரும் யுனைடட் கால்பந்தாட்ட அக்கடமி பணிப்பாளருமான ஆர்.எம். சபறுள்ளா, மாத்தளை மாவட்ட கால்பந்தாட்ட லீக் முன்னாள் செயலாளர் யூ.எல்.எம்.லத்தீப், தற்போதைய செயலாளர் செந்தில் குமார், பிரின்ஸ் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ், வீ.கே ஜுவல்லரி உரிமையாளர் சிவக்குமார், ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தின் உப தலைவர்களான வி. முத்துசாமி, எஸ். விஜயகுமார், செயலாளர் ஆர். நேருஜி, பொருளாளர் எஸ். சுரேஷ், முகாமையாளர் வை. சியாட், பயிற்சியாளர் எஸ். எம். உதயகுமார், ஆலோசகர்களான ஆர். ஜெயசுந்தர், அத்துல வீரக்கொடி உட்பட கழகத்தின் நிர்வாகிகள், கால்பந்தாட்ட ரசிகர்கள், ஜொலி போய்ஸ் நிர்வாகத்தின் குடும்ப உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ் தொகுத்து வழங்கியதுடன் சிங்கள மொழியில் ஏ.சி.எம். நியாஸ், தமிழ் மொழியில் ராஜி பாய் ஆகியோர் வர்ணனைகளை வழங்கினார்கள்.
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago