2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

29ஆவது தங்கங்களின் சமர்: வென்ற மட்டு சிவானந்தா

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 05 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்கர் இப்ராஹிம்

திருகோணமலை ராம கிருஷ்ண மிஷன் ஸ்ரீகோணேஸ்வரா இந்து கல்லூரியுடனான 29ஆவது 50 ஓவர்கள் கொண்ட தங்கங்களின் சமர் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி வென்றது.

கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்கு 73 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிவானந்தா, 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சிவானந்தாவின் துவாதரன், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் போட்டியின் நாயகனாக சிவானந்தாவின் அணித்தலைவர் நிரூபன் ஆகியோர் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .