Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.எல்.ரி. யுதாஜித்
200 மீற்றர் கடல் தூரத்தை 10 நிமிடங்களில் நீந்திக் கடந்து பலரது பாராட்டையும் கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகள் பெற்றுக் கொண்டனர்.
அண்மையில் மூன்று நாள்களாக நடைபெற்ற “உயிர்காக்க பயில்வோம்” பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்றது.
இதன்போது நீச்சல் பயிற்சி மற்றும் நீரில் மூழ்குவோரை காப்பற்றல், நீரில் மூழ்கி காணாமல் போவோரை சுழியோடி தேடுதல் எனப்பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன் போது, உயிர்காப்புப்பயிற்சியில் பங்கு பற்றியிருந்த 47 பேரில் கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளான முஹம்மத் கபீர் இப்றாஹீம், அப்துல் மஜீத் ஹலீம் ஆகியோர் சுமார் 200 மீற்றர் தூரத்தை 10 நிமிடங்களுக்குள் கடலில் நீந்திக்கடந்து சகலரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டனர்.
அத்தோடு, அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் நீர் அனர்த்தங்களின் போது குறித்த கல்குடா டைவர்ஸ் அணியினர் களத்தில் நின்று பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
49 minute ago