2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஹெஸ்புல்லா அமைப்பை எச்சரிக்கும் இஸ்ரேல்

Freelancer   / 2024 ஜூன் 19 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹெஸ்புல்லா அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் இராணுவ சிவில் கட்டமைப்புகளை காண்பிக்கும் காணொளிகளை ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாங்கள் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் லெபானிற்கும் எதிரான விளையாட்டின் விதிமுறைகளை மாற்றும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள அதேவேளை, முழுமையான யுத்தமொன்றில் ஹெஸ்புல்லா அமைப்பு முழுமையாக அழிக்கப்படும் எனவும், லெபனான் மோசமாக தாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹெஸ்புல்லா அமைப்பு தனது காணொளியில் இஸ்ரேலின் ஹெய்பா நகரின் பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை காண்பித்துள்ளது. வணிக வளாகங்கள் உயர்மாடிக்கட்டிடங்கள் போன்றவற்றையும் ஹெஸ்புல்லா அமைப்பு காண்பித்துள்ளது.

அதேவேளை இந்த நகரம் லெபான் எல்லையில் தென்பகுதியில் உள்ள நிலையில், ஹெய்பா நகரில் உள்ள இஸ்ரேலின் இராணுவகட்டுமானங்களையும் ஹெஸ்புல்லா அமைப்பு தனது காணொளியில் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .