2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஹெலியும் விமானமும் மோதி விபத்து: 18 சடலங்கள் மீட்பு

Freelancer   / 2025 ஜனவரி 30 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது.

ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது. விமான விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 இராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விமான விபத்தையடுத்து, ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்ஏஏ) கூறுகையில், பி.எஸ்.ஏ. ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான CRJ700 ஜெட் தாமதமாக விமான நிலையத்தை நெருங்கும்போது சிகோர்ஸ்கை H-60 என்ற ஹெலிகாப்டருடன் மோதியது.

இந்த விபத்து தொடர்பாக எஃப்ஏஏ மற்றும் என்டிஎஸ்பி விசாரணை நடத்தும் என்றும் என்டிஎஸ்பி விசாரணையை வழிநடத்தும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

போடோமேக் நதிக்கு அருகில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்தில் சிறிய விமானம் கீழே விழுந்தது உறுதி செய்யப்பட்டது என்று கொலம்பியா தீயணைப்பு மற்றும் அவசர மருத்து சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X