2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

ஹெலிகொப்டருடன் அமெரிக்கன் எயார்லைன்ஸ் ஜெட் மோதியது

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய அமெரிக்காவின் றீகன் வொஷிங்டன் தேசிய விமானநிலையத்துக்கருகே வியாழக்கிழமை (30) காலை நடுவானில் மோதியதையடுத்து அமெரிக்கன் எயார்லைன்ஸ் பிராந்திய பயணிகள் ஜெட்டொன்றும், ஐக்கிய அமெரிக்க இராணுவ பிளக் ஹவாக் ஹெலிகொப்டரும் பொடொமன் ஆற்றில் வீழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல உடல்கள் தண்னீரிலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுடன் 60 பயணிகள் விமானத்தில் பயணிக்கவிருந்ததாகவும், ஹெலிகொப்டரில் மூன்று படைவீரர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து நால்வர் உயிருடன் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X