2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் ரைசி மரணம்?

Freelancer   / 2024 மே 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி அல்ஜஸீரா மற்றும் பிபிசி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் போருக்கு இடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது.

விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில்  விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை அடுத்து ஈரானிய அதிபர் ரைசி மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .