2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது”

Mithuna   / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந் நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் “சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது, சண்டை முடிகிறது.

ஹமாஸ் தலைவருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் அமைப்பினருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் அமைப்பினர் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்” என்றார்.

ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .