Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 14 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில், மீண்டும் ஸ்பெய்னில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த அனர்த்தத்தில், சுமார் 5,000 வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. அத்துடன், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு, உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். 223 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட இந்த வெள்ள பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 2 வாரங்கள் ஆன பிறகும், பாதிக்கப்பட்ட பல இடங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஸ்பெய்னில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு டராகோனா மற்றும் தெற்கு மலாகா மாகாணங்களில், 12 மணி நேரத்தில் 180 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு கிரனடா மற்றும் வேலன்சியாவின் கடற்கரை பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், டராகோனா, பார்சிலோனா மற்றும் முர்சியா ஆகிய பகுதிகளில் மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, மலாகா பகுதியில் சுமார் 3,000 மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago