Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழக்குகளை எதிர்கொள்வதற்கு, பங்களாதேஷின் முன்னாள் பிரதமர். ஷேக் ஹசீனாவை பங்காளதேசஷுக்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு, பங்காளதேஷ் இடைக்கால அரசு, செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது
பங்காளதேஷில், ஷேக் ஹசீனா 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி, மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இதனால் ஷேக் ஹசீனா பங்காளதேஷை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரது அரசு கவிழ்க்கப்பட்டது. வேறு நாட்டில் அரசியல் புகலிடம் கிடைக்காததால், ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.
அதே சமயத்தில், முகமது யூனுஸ் தலைமையில் பங்காளதேஷில் இடைக்கால அரசு பதவியேற்றது. ஷேக் ஹசீனா, அவருடைய அமைச்சர்கள், ஆலோசகர்கள், இராணுவ, சிவில் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்குகளும், இனப்படுகொலை குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. இந்த வழக்குகளில் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு எதிராக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, வழக்குகளை எதிர்கொள்ள ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்யுமாறு பங்காளதேச வெளியுறவு அமைச்சகத்துக்கு பங்காளதேஷ் உள்துறை அமைச்சு கடிதம் எழுதியுள்ளது.
இதற்கமைய, பங்காளதேஷ் இடைக்கால அரசு, வழக்குகளை சந்திக்க ஷேக் ஹசீனாவை வங்காளதேஷுக்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இத்தகவலை வெளியுறவு விவகார ஆலோசகர் தவுஹித் உசைன் தெரிவித்தார். இந்தியா-பங்காளதேஷ் இடையே குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம் இருப்பதால், அதன்மூலம் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கலாம் என்று, பங்காளதேஷ் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago