2025 மார்ச் 31, திங்கட்கிழமை

வைத்தியசாலையை தாக்கிய இஸ்ரேல்:ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி

Freelancer   / 2025 மார்ச் 24 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு காசாவில் அமைந்துள்ள வைத்தியசாலையை, ஞாயிற்றுக்கிழமை (23), குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹமாஸ் அரசியல் அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக, ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கி இருந்ததாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உயிரிழப்புக்கு ஹமாஸ் அமைப்பினரே காரணம் எனவும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அவர்கள் இயங்கி வருவதால் தாக்குதலின்போது, அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X