2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

வெள்ளை மாளிகை அருகே பதற்றம்

Freelancer   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரஇகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 

வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றி வந்துள்ளார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை தாக்க திட்டமிட்டு அந்த நபர் அங்கு சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடந்தபோது, வெள்ளை மாளிகையில் டிரம்ப் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X