2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“வெள்ளிக்கு முன் விடமாட்டோம்”

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்‌ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்‌ரேல் சிறையில் இருந்து 150 பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியானது.

பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் இருக்கும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்‌ரேல் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்‌ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்‌ரேல் -ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பிணைக்கைதிகளின் விடுதலை என்பது வெள்ளிக்கிழமைக்கு (24) முன்பாக நடைபெறாது. இஸ்‌ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .