2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு தற்காலிக தடை

Freelancer   / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். 

இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் வருகிற 2027ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X