2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

வீட்டின் மீது விமானம் மோதி விபத்து

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில், ஞாயிற்றுக்கிழமை (22), வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று, சாலொ பாலோ மாகாணத்துக்கு, ஞாயிற்றுக்கிழமை (22) சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், சாலொ பாலோ மாகாணம் - கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீடொன்றுடன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர். அதேவேளை, வீட்டில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X