2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விஷவாயு தாக்கியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Freelancer   / 2024 ஜூன் 05 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்றில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், சுமார் 1,500 அடி ஆழத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சுரங்கத்தில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது.

இந்நிலையில், சுரங்கத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த விஷவாயு வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரங்க மேலாளர், ஒப்பந்ததாரர் உட்பட 11 பேர் மயங்கி கிடந்த நிலையில், மீட்பு படையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுரங்கத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .