2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

விவாகரத்து விருந்து

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவாகரத்தான பெண்ணொருவர் அதனை ஆடம்பரமாக  விருந்து கொடுத்துக்  கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரித்தானியாவில் வசித்து வரும் இந்தியப் பெண்மனியான சோனியா குப்தா (Sonia Gupta)என்பவரே தனது 17 வருடகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தமையைக் கொண்டாடியுள்ளார்.

45 வயதான இவர்   கடந்த 2003 ஆம் ஆண்டு  திருமணம் செய்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளார். எனினும் அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்துக் கோரி விண்ணப்பித்திருந்த அவரது வழக்கானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து விவாகரத்துப் பெற்ற அவர் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆடம்பர விருந்துபசாரமொன்றை அளித்துள்ளார்.

மேலும் அவ்விருந்தில்,  ‘finally divorced’ என்ற பொறிக்கப்பட்ட உடையை அணிந்து வலம் வந்தமை  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர் ” தற்போது சுதந்திரமாகவும்  மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X