2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

விலை கொடுத்து கிரீன்லாந்தை வாங்கவுள்ள ட்ரம்ப்

Freelancer   / 2025 மார்ச் 06 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

"டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்" என்று,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்த ட்ரம்ப்பின் யோசனையை டென்மார்க் அரசு நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, அவர் டென்மார்க் பயணத்தை இரத்து செய்தார். 

தற்போது மீண்டும் ஜனாதிபதியாகியுள்ள சூழலில், டென்மார்க்கை வாங்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

 அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள் மத்தியில் ட்ரம்ப் இது தொடர்பாக பேசியதாவது,

“கிரீன்லாந்தை ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா கைப்பற்றும். கிரீன்லாந்தில் தற்போது வசிப்பவா்களை தங்கள் மக்களாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இருக்கிறது " என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .