2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வியக்க வைத்த மூளை

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் நாட்டை சேர்ந்த நபரொருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு நாசியிலிருந்து நீர் வடிதல் பிரச்சனையும் இருந்து வந்ததுள்ளது. இதையடுத்து, அந்நாட்டின் வடமத்திய கடற்கரை பகுதியின் டாங் ஹாய் (Dong Hoi) நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு டென்ஷன் ந்யூமோசெபாலஸ் (tension pneumocephalus) எனும் அரிய நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இது மூளையில் உள்ள அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு அபாய நிலை ஆகும்.

இதற்கான காரணம் என்னவென்று மேலும் பரிசோதித்த போது மருத்துவர்களே வியக்கும் வண்ணம், அந்த நோயாளியின் நாசி வழியாக சென்று மூளைக்குள் இரண்டு சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மருத்துவர்கள் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .