2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

விமானம் விழுந்து நொறுக்கியதில் 18 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 24 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது.

விமானம் தீப்பற்றி எரிய அதிலிருந்த பயணிகள் 18 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விபத்துக்குள்ளான விமானம் சௌர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. காத்மாண்டுவில் இருந்து போக்காராவுக்கு இந்த விமானம்  புதன்கிழமை(24) காலை புறப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்ட உடன் விமானத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதனை விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புப் படை வீரர்கள் அணைத்துள்ளனர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .