2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

விமான விபத்து: 28 பேர் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 28 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.
 
விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X