2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க புதிய விதிமுறை அமுல்

Freelancer   / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து விமானநிலையத்தில், உறவுகளை கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அன்பானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவர்களை ஆரத்தழுவி வழியனுப்பி பிரியாவிடை கொடுப்பது வழக்கம். 

இந்நிலையில் நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பதாகைகளும் ஒட்டப்பட்டுள்ளன.

அதில்,  'கட்டி தழுவுவதற்கான நேரம் அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு, கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மனிதாபிமானமற்ற செயல் என விசனம் தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு விமான நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X