2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

விபத்தில் 14 பேர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியா - நைஜர் மாகாண நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், 14 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற  பஸ் ஒன்று, குசோபோகி என்ற பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. அப்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லொறி மீது  மோதியது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில்  14 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X