Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமேசான் நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகப் பணக்காரர்களுள் ஒருவருமான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) மனிதர்களைக் குறைந்த கட்டணத்தில் விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முயற்சியில் புளூ ஒரிஜின் (Blue Origin) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் தனது நிறுவனத்தின் தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் (New Shepherd) விண்கலத்தின் மூலம் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு சென்று வந்தார். இது மிகப்பெரும் மைல்கல் சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான அலன் ஷெப்பர்ட்டின் மகளான 74 வயதான லாரா ஷெப்பர்ட் உள்ளிட்ட 6 பேரை கொண்ட குழு புளூ ஆரிஜின் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியது.
சுமார் 10 நிமிடங்களுக்கு நீடித்த இப்பயணத்தில் நியூ ஷெப்பர்ட் விண்கலமானது 100 கிலோமீற்றர் உயரம் வரை பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago