2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

வாக்கி-டாக்கி வெடிப்பில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானில் பேஜர்கள் வெடித்துச் சிதறிய நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் கடந்தாண்டு அக்., 7இல் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில், லெபனானில் 3,000க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம், நேற்று முன்தினம் வெடித்து சிதறியது.

பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் பேஜர் வெடித்ததில், 12 பேர் பலியாகினர்; 2,750 பேர் காயமடைந்தனர். இவர்களில், 200 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் வெடித்ததில் நேற்று 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.

லெபனான் பாராளுமன்ற உறுப்பினர் அலி மகன் மஹ்தியின் இறுதி ஊர்வலத்தின் போது வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியுள்ளன.

பேஜர்கள் வாங்கிய அதே நேரத்தில், வாக்கி-டாக்கிகளும் ஹிஸ்புல்லாவால் வாங்கப்பட்டன. பேஜர்களில் வெடிகுண்டு வைத்தபோதே, வாக்கி டாக்கியிலும் இஸ்ரேல் உளவுப்படை வெடிகுண்டுகளை வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X