2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

வரிகளைக் குறைக்க பரிசீலிப்பேன்: ட்ரம்ப் அறிவிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பதற்கான சலுகைகளைப் பரிசீலிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் புதிய வரியை எதிர்நோக்கியுள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாராகி வரும் நிலையில், அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
 
10 சதவீதம் என்ற அடிப்படையில் புதிய வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 44 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கம்போடியா 49 சதவீத வரியையும், வியட்நாம் 46 சதவீத வரியையும், சீனா 34 சதவீத வரியையும் எதிர்கொள்கின்றன. (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X