2025 ஜனவரி 01, புதன்கிழமை

விமான விபத்தில் 179 பேர் பலி

Mayu   / 2024 டிசெம்பர் 29 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில் 179  பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு விமானம் வந்துகொண்டிருந்தது.

இதன்போது, முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில், அதில் பயணம் செய்த 179 பேரும் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X