2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய அனுமதி

Freelancer   / 2025 ஜனவரி 28 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் காசாமுனையை, நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர், 15 மாதங்களுக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

இதில் ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. போர் நிறுத்தத்தை அடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்கு திரும்பி வருகிறார்கள்.

இதற்கிடையே, ஒப்பந்தப்படி, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண் பிணைக்கைதியை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

அவர் விடுதலை செய்யப்படும் வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு  காசாவுக்கு திரும்ப அனுமதிக்க மாட்டோம் என்று, இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில், அவர் வருகிற 1ஆம் திகதி விடுவிக்கப்படுவார் என்று, ஹமாஸ் தெரிவித்தது.

இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து, வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூட்டம் கூட்டமாக வடக்கு காசாவுக்கு திரும்புகிறார்கள். அவர்கள் நெட்சாரிம் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான வீதி முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X