2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வடகொரியாவின் மிரட்டலுக்கு தென்கொரியா பதிலடி

Freelancer   / 2024 ஜூன் 18 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

தென்கொரியாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீப கற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியாவின் தேபேக் என்ற மலைப்பகுதியில் அந்நாட்டு இராணுவ வீரர்கள் அமெரிக்க படைவீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில், மலைப்பகுதியில் துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானம் மூலம் இலக்கை தாக்கி அடித்தல் விமானங்களை குறிவைத்து தாக்குதல் போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டனர். நவீன ரக துப்பாக்கிகளும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .