Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வங்காளதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்திகதி பிரதமர் மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்த கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் அங்குள்ள காளி தேவி சிலைக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (10) தினம் கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பிறகு, மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
40 minute ago