2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்: கோயில்கள் மீது தாக்குதல்

Editorial   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்திய கலாச்சார மையம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4 இந்து கோவில்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள இந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தலைவர் கஜோல் தேவ்நாத், டாக்காவின் தன்மோந்தி பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலாச்சார மையம் வன்முறை கும்பலால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் 4 இந்து கோயில்கள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தவிர டாக்காவில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகம் உட்பட பல்வேறு முக்கிய கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. பங்கபந்து அருங்காட்சியகம், 1975ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (ஷேக் ஹசீனாவின் தந்தை) நினைவாக கட்டப்பட்டது.

சேதமடைந்த இந்திய கலாச்சார மையத்தில் 21 ஆயிரம் புத்தகங்கள், பல்வேறு வரலாற்று ஆவணங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .