2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

லொறி கவிழ்ந்து விபத்து:64 பேர் ஸ்தலத்திலேயே பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விபத்தில், 64 பேர் ஸ்தலத்திலேயே  உயிரிழந்தனர்.

 எத்தியோப்பியா நாட்டின் கிராமப்பிற பகுதிகளில், திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு பஸ்களை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக லொறிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

ஏனெனில் அவை மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும், காலாச்சார ரீதியாக மக்கள் இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (29), திருமண நிகழ்வுக்காக லொறி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.

 அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லொறி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 64 பேர் ஸ்தலத்திலேயே  உயிரிழந்தனர். மேலும், சிலர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் எழுவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் ஆவர். 

மோசமான வீதியே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X