2024 நவம்பர் 23, சனிக்கிழமை

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 52 பேர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 03 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

லெபனானில் உள்ள தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த கிராமங்கள் குண்டுவீச்சுக்கு உள்ளாகின.

இதனிடையே, மத்திய காசாவில் வியாழக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த 25 பேரின் உடல்களை பாலஸ்தீனியர்கள் மீட்டெடுத்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

தெற்கு பெய்ரூட்டில் புறநகர் பகுதியான தஹியேக்கில் பல்வேறு கட்டடங்களின் மீதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. என்றாலும் பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதால் அங்கு உயிரிழப்புகள் குறித்து தகவல் இல்லை.

காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் லெபனான் எல்லைப்புறத்தையும் தாண்டி விரிவாக்கம் செய்து வருகிறது. அதேநேரத்தில் வடக்கு காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராகவும் ஒரு நீண்ட போரினை இஸ்ரேல் நடத்தி வருகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X