2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 27 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, "அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும்" என்று, வெள்ளை மாளிகை,  சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பிடிபட்ட லெபனான் கைதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை கூறியது. 

இது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இடையில் சிறியளவில் சண்டையை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்நிறுத்தம் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X