2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

லெபனான்-இஸ்ரேல் எல்லை போர்: முடிவுக்கு வருகிறது

Freelancer   / 2024 நவம்பர் 27 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேலும், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுளலளதாவது, 

"இன்று, மத்திய கிழக்கில் இருந்து எனக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. நான் லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதமர்களுடன் பேசினேன். மேலும் இந்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான பேரழிவுகரமான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்" என்று, அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், "இன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடக்கும் போர் வியாழக்கிழமை (இன்று) முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்களுக்கு நீடித்த பாதுகாப்பை போர்க்களத்தில் மட்டும் அடைய முடியாது. அதனால்தான் போர் நிறுத்தத்தை உருவாக்க இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு எனது குழுவை நான் அறிவுறுத்தினேன்" என்று, அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர் மைக் ஹெசாக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X