Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு ட்ரம்ப் இரவு விருந்து அளித்து கௌரவித்துள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் சென்றிருந்தனர். இந்தியாவில் இருந்து தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மனைவி நீடா அம்பானி சென்றிருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்லாமல், உலகளாவிய அரசியல் நிகழ்வாக இதனை டிரம்ப் மாற்றியுள்ளார். அவர் அளித்த இரவு விருந்திலும் அரசியல் செய்த செய்தியே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதுமுள்ள கோடீஸ்வரர்கள் பலரும் உண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உடன் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து சாப்பிட சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய தொகையை செலவிட்டுள்ளனர்.
ட்ரம்புடனான இரவு விருந்து நிகழ்ச்சி, ஒரு நிதி திரட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது. இதன்படி, 5 வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 ஆயிரம் டொலர்கள் முதல் அதிகபட்சம் 1 மில்லியன் டொலர்கள் வரை அவற்றின் விலை இருக்கும். அவரவர் விருப்பத்திற்கேற்ப டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.
இதில், 1 மில்லியன் டொலர் என்பது இலங்கை மதிப்பில் ரூ.12 கோடி ஆகும். அதேவேளையில், ட்ரம்ப் மற்றும் வான்ஸ் இருவரையும் சந்திக்க பெரிய நன்கொடையாளர்கள் இரட்டிப்பாக தொகையை தர வேண்டும். இந்த 1 மில்லியன் டொலர் நன்கொடைக்கு ஈடாக, வான்ஸ் உடன் இரவு விருந்து சாப்பிட 2 டிக்கெட்டுகளும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரம்ப் உடன் இரவு விருந்து சாப்பிடுவதற்கு 6 டிக்கெட்டுகளும் கிடைக்கும்.
இதற்காக ஏற்கனவே நிறைய பேர் பெரிய தொகையை கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளனர்.
இதன்படி, ரூ.1,700 கோடி வரை பணம் திரண்டுள்ளது. இந்த தொகையானது ரூ.2 ஆயிரம் கோடியை அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஒரு புதிய சாதனை படைக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
7 hours ago
9 hours ago
06 Apr 2025