2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ரஷ்யாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம்

Freelancer   / 2025 மார்ச் 12 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.

உக்ரைன், ரஷ்யாவுக்கு இடையேயான போர் இன்று 1,112வது நாளாக நீடித்து வருகிறது. 

 

 இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதேவேளை, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்நாட்டுக்கு வழங்கி வந்த இராணுவ உதவி, உளவு தகவல்களை அமெரிக்கா நிறுத்தியது.

மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை (11) நடந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. 

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட இராணுவ உதவி, உளவு தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்ப்புக்கொண்டுள்ள நிலையில், ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

 அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

“போரை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன்” என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்துவரும் உக்ரைன் - ரஷ்யா போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X