Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய - உக்ரேன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரேனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில், உக்ரேனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இதில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மேக்ரான், “இப்போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.
ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்ய மக்களுடன் அல்ல. குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரேனுக்கு விரைவில் வழங்கப்படும்.
சில தினங்களுக்கு முன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், “நேரடியாக மேற்கத்திய நாடுகளின் இராணுவம் உக்ரேன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷ்யாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும்” என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago