Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 25 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் நாட்டின் மார்சே நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் திடீரென திங்கட்கிழமை (24) குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு ஏறக்குறைய 30 தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.
இதுபற்றி டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், தூதரக பூந்தோட்ட பகுதியில் மர்ம நபர்கள் சிலர் 2 குண்டுகளை வீசி சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில், கார் ஒன்று நின்றிருந்தது. அது வேறொரு பகுதியில் இருந்து திருடப்பட்து என கூறப்படுகிறது.
எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுபற்றி ரஷ்ய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, மார்சே நகரில் அமைந்த ரஷிய தூதரகத்தின் மீது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதலின் அறிகுறிகளாகும்.
இதுபற்றி பிரான்ஸ் உடனடியாக, முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும். ரஷ்ய அமைப்புகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என கூறினார்.
கடந்த வாரம் புதன்கிழமை, ரஷ்யாவின் வெளியுறவு நுண்ணறிவு பிரிவு வெளியிட்ட செய்தியில்,
“ஐரோப்பாவில், குறிப்பிடும்படியாக ஜெர்மனி, பால்டிக் மற்றும் ஸ்கேன்டிநேவியன் நாடுகளில் உள்ள ரஷிய தூதரகங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியங்கள் பற்றி உக்ரைன் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்” என எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், பிரான்சில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இதற்கு பின்புலத்தில் இருந்து செயற்பட்டவர்கள் யாரென்ற விவரம் வெளிவரவில்லை. இதுபற்றி பிரான்ஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago