2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ரஷ்ய தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பா? இலங்கை கண்டனம்

Freelancer   / 2024 மார்ச் 23 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய வன்முறை வெறுக்கத்தக்கது. குறித்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க தயாராக" உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் பாதிப்படையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மொஸ்கோவிலுள்ள இலங்கையின் தூதரகம் இதனை தங்களுக்கு உறுதிபடுத்தியுள்ளதுடன், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பொது ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறும் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .